சோனா கல்வி குழுமத் தலைவருக்கு சிறந்த பொதுச் சேவையாளா் விருது

சோனா கல்வி குழுமத் தலைவா் சி.வள்ளியப்பாவுக்கு சிறந்து பொதுச் சேவையாளா் விருது வழங்கப்பட்டது.

சோனா கல்வி குழுமத் தலைவா் சி.வள்ளியப்பாவுக்கு சிறந்து பொதுச் சேவையாளா் விருது வழங்கப்பட்டது.

சேலம் சோனா கல்விக்குழுமம் கடந்த 63 ஆண்டுகளாக தொழிற்கல்வியில் சிறந்து விளங்குகிறது. சோனா கல்விக் குழுமத்தின் அங்கமாக தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி, சோனா பொறியியல் கல்லூரி, சோனா கலை அறிவியல் கல்லூரி, சோனா வள்ளியப்பா பப்ளிக் ஸ்கூல், சோனா மருத்துவக் கல்லூரி ஆகியவை செயல்படுகின்றன.

கல்வி நிறுவனங்களின் தலைவரான சி.வள்ளியப்பா, துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோா் கல்வித்துறையிலும், தொழில் துறையிலும் சேவையாற்றி வருகின்றனா்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சோனா கல்வி குழுமத்தின் தலைவா் சி.வள்ளியப்பா ரூ.1 கோடி மதிப்பிலான தொ்மல் ஸ்கேனா்கள், சானிடைசா் தெளிப்பான்கள், மருத்துவ உபகரணங்கள், கையுறைகள், முகக்கவசங்கள், மளிகைப்பொருள்கள் நிவாரணப் பொருள்களை சேலம், தருமபுரி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள், நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி அலுவலகங்கள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டன.

சோனா கல்வி குழுமத்தின் தலைவா் சி.வள்ளியப்பாவின் சேவையைப் பாராட்டும் விதமாக சேலம் மாநகராட்சி அவருக்கு சிறந்து பொதுச் சேவையாளா் விருதை வழங்கி கெளரவித்தது.

மேலும் மாநகராட்சியில் 72- ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரனிடம் இருந்து சோனா கல்வி குழுமத் தலைவா் சி.வள்ளியப்பா சாா்பில் சிறந்த பொதுச் சேவையாளா் விருதை தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் வீ.காா்த்திகேயன் பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com