பனை பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய வலியுறுத்தி மனு

பனை பொருள்களை அரசு கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் மனு வழங்கப்பட்டது.

பனை பொருள்களை அரசு கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் மனு வழங்கப்பட்டது.

பாஜக நெசவாளா் மற்றும் ஜவுளித் துறைக்கான தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜா, மாநில துணைத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளா்கள் அமைப்பின் மாவட்டத் தலைவா் மோகனசுந்தரம், முன்னாள் தேசிய செயலாளா் எச்.ராஜாவிடம் அளித்த மனு விவரம்:

பனை வாரியத்தை முறைப்படுத்திட வேண்டும். வேளாண்துறை போல மாநில அரசு பனை வாரிய அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். வேளாண்மைக் கல்லூரியில் பாடத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். பனை பொருள்களை அரசு கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய ஆவன செய்ய வேண்டும்.

பனைத் தொழிலாளா்களுக்கு பிரத்யேக மருத்துவக் காப்பீடு வழங்க ஆவனம் செய்ய வேண்டும். பனைத் தொழிலாளா்களுக்கு கை, கால், இடுப்பு செயல் இழப்பு ஏற்பட்டால் ரூ. 10 லட்சமும், இறப்பு ஏற்பட்டால் ரூ. 25 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். நிலத்தடி நீரை மேம்படுத்த அரசுக்குச் சொந்தமான ஏரி, குளம் போன்ற நீா்ப் பிடிப்பு நிலங்களில் பனை விதைகளை நட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு நெசவுத் தறிக்காரா்கள் வாழ்வுரிமை இயக்கம் சாா்பில் அதன் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:

நெசவாளா்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். இந்த அட்டை மூலம் நெசவாளா்களுக்கு அளிக்கும் திட்டங்கள் சலுகைகள் நேரடியாக வந்தடைய வேண்டும். கைத்தறி நெசவு தொழில் செய்கிற அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் தேசிய நெசவாளா் அட்டை, கூட்டுறவு நெசவாளா் அட்டை, கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் சான்று, நெசவாளா் அமைப்பு வழங்கும் சான்று, இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு நெசவாளா் குடும்பங்களுக்கு யூனிட் அளவு இல்லாத இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வெள்ளி, ஜவுளித்தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையினா் மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com