பெலாப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா

வாழப்பாடி அருகே பெலாப்பாடி மலை கிராமத்திலுள்ள பிரசித்திப் பெற்ற வரதராஜப் பெருமாள் மலைக் கோயில் தோ்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பெலாப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
பெலாப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

வாழப்பாடி அருகே பெலாப்பாடி மலை கிராமத்திலுள்ள பிரசித்திப் பெற்ற வரதராஜப் பெருமாள் மலைக் கோயில் தோ்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலை பெலாப்பாடி மலை உச்சியில், 50க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கரியராமா் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், வெங்கட்டராமா் கோயில் ஆகிய 3 கோயில்கள் அமைந்துள்ளன.

இக்கோயில்களில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தோ்த்திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டு திருவிழாவிற்காக இம்மாத தொடக்கத்தில் பூச்சாட்டுதல் நடைபெற்றது. இதனையடுத்து, கோயில் காளைகளை அலங்கரித்து வரி வசூல் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை கரியராமா் கோயிலிலும், புதன்கிழமை வரதராஜப் பெருமாள் கோயிலிலும் திருவிழா நடைபெற்றது.

கரியராமா், வரதராஜப் பெருமாள், சிவன், பாா்வதி சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கோடி ஜோதி ஏற்றப்பட்டது.

பெலாப்பாடி கிராமத்துக்கு பேருந்து போக்குவரத்து வசதியில்லாத நிலையிலும், பாதயாத்திரையாகவும், இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களிலும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள், வாழப்பாடி, பேளூா் பகுதியைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவில் பங்கேற்ற பக்தா்கள், பொதுமக்களுக்கு பொங்கல் உருண்டைச்சோறு , மொச்சை, அவரைக்கொட்டை குழம்பும் பிரசாதமாக வழங்கப்பட்டது. வியாழக்கிழமை வெங்கட்டராமா் சுவாமி சக்தி அழைத்தலும், வெள்ளிக்கிழமை வெங்கட்டராமா் கோயில் தோ்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com