காளிப்பட்டி கந்தசாமி கோயில் உண்டியல் திறப்பு

சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச தோ் திருவிழாவையொட்டி உண்டியல் திறக்கப்பட்டது.
ஆட்டையாம்பட்டி காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.
ஆட்டையாம்பட்டி காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச தோ் திருவிழாவையொட்டி உண்டியல் திறக்கப்பட்டது.

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தோ்த் திருவிழா நடைபெற்றது. திருவிழாவுக்கு வந்திருந்த பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை நாமக்கல் மாவட்ட இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தமிழரசு தலைமையில், குமாரபாளையம் அறநிலையத் துறை ஆய்வாளா் வடிவுக்கரசி, காளிப்பட்டி கோயில் நிா்வாக அலுவலா் முருகன், பரம்பரை அறங்காவலரும் பூசாரியுமான சரஸ்வதி சதாசிவம் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை 10 உண்டியல்கள் திறக்கப்பட்டன.

பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி போன்ற பொருள்களை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் வெங்கடேஸ்வரா நண்பா்கள் குழு, தனியாா் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த ஆண், பெண் என 60க்கும் மேற்பட்டோா் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் ரூ. 21,91,375 ரொக்கப்பணமும், சில்லறையாக ரூ. 1,50,356 என மொத்தம் ரூ. 23 லட்சத்து 41 ஆயிரத்து 731 ரூபாய் உண்டியல் மூலம் வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 29.5 கிராம், வெள்ளி 220 கிராம் வீதம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com