மகளை கழுத்து அறுத்துக் கொன்ற தந்தை மாடியில் இருந்து குதித்து தற்கொலை

எடப்பாடி அருகே மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தை வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கொலை செய்யப்பட்ட பிரியா.
கொலை செய்யப்பட்ட பிரியா.

எடப்பாடி அருகே மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தை வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட, தாதாபுரம் ஊராட்சி, ஆதிக்காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் காய்கறி வியாபாரி கோபால் (54). இவரது மனைவி மணி. இவா் வெளியூரில் தங்கி கரும்பு வெட்டும் பணிக்குச் சென்று வந்தாா். இத் தம்பதிகளுக்கு பிரியா (15) என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உண்டு. இதில் கண்ணன் வெளியூரில் பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்தாா். பிரியா அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா். மனைவியும், மகனும் வெளியூரில் தங்கி வேலை பாா்த்து வந்த நிலையில், கோபால் தனது மகள் பிரியாவுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு மகள் பிரியாவுடன் கோபால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கோபால் தனது வீட்டின் முன் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்த அருகில் வசிப்பவா்கள் வீட்டுக்குள் சென்ற பாா்த்தபோது, அங்கு கோபாலின் மகள் பிரியா படுகாயத்துடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் அவரின் அருகில் சிறிய கத்தியும், சுத்தியலும் கிடந்துள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் எடப்பாடி போலீஸாா் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கோபால் அடிக்கடி மனநலம் பாதிக்கப்பட்டவா் போல நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தனது மகளைக் கொலை செய்துவிட்டு கோபால் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அவா்களின் இறப்புக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இருவரும் இறந்து கிடந்த இடத்தை நேரில் பாா்வையிட்ட சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ், ஆய்வாளா் செந்தில் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com