சங்ககிரியில் காது கேளாமைக்கான பரிசோதனை முகாம்

சங்ககிரியில் நடைபெற்ற காது கேளாமைக்கான பரிசோதனை முகாமில் 102 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 
சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காதுகேளாமைக்கான பரிசோதனை முகாம்.
சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காதுகேளாமைக்கான பரிசோதனை முகாம்.

சங்ககிரியில் நடைபெற்ற காது கேளாமைக்கான பரிசோதனை முகாமில் 102 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்பலத்துறை சார்பில் சங்ககிரி அரசு மருத்துவமனை, சங்ககிரி பப்ளிக்சேரிடபுள் டிரஸ்ட், அரிமா சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய காது கேளாமைக்கான சிறப்பு பரிசோதனை முகாம் சங்ககிரி புதிய எடப்பாடி சாலையில் உள்ள அரிமா சங்க கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

சங்ககிரி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் ஜி.ஜெயஸ்ரீ இம்முகாமிற்கு தலைமை வகித்து முகாமில் கலந்து கொண்ட 102 பேருக்கு காது கேட்கும் திறன் குறித்து பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார். சேலம் சுதாகர் இஎன்டி மருத்துவமனையில் ஒலி-ஒளி அதிர்வுகளை பரிசோதிக்கும் பரிசோதகர்கள் நிர்மலா, கிருத்திகா, மீரா ஆகியோர் உடனிருந்தனர். முகாமில் 37 பேருக்கு விலையில்லா காதொலி கருவிகள் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தமிழக முதல்வரின் மருத்துகாப்பீட்டுத் திட்டத்தில் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக மருத்துவகுழுவினர் தெரிவித்தனர். 

அரிமா சங்க செயலர் எஎஸ்டி, கார்த்தி, நிர்வாகி அருண்சந்தர், சங்ககிரி பப்ளிக்சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார், செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் எஸ்.கணேஷ், துணைத்தலைவர் எம்.பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ஆர்.கார்த்திகேயன், முருகேசன், சரவணன், பன்னீர்செல்வம், கதிர்வேல், பி.கார்த்திகேயன், ஆதிபாரசக்தி வார வழிபாட்டு மன்றத்தலைவர் பொறியாளர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு பொதுநலஅமைப்புகளின் நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com