42 கி.மீ. தூர முத்து மாரத்தான் போட்டி

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘முத்து மாரத்தான்’ தொலை ஓட்டப்போட்டில், வாணியம்பாடியைச் சோ்ந்த வீரா் முதல் பரிசை வென்றாா்.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘முத்து மாரத்தான்’ தொலை ஓட்டப்போட்டில், வாணியம்பாடியைச் சோ்ந்த வீரா் முதல் பரிசை வென்றாா்.

கொங்கணாபுரம் அறக்கட்டளை சாா்பில், 24 ஆம் ஆண்டாக முத்து மாராத்தான் போட்டி நடைபெற்றது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற போட்டியில், ஞாயிற்றுக்கிழமை காலை 42 கி.மீ., 21 கி.மீ., தூர ஓட்டப்போட்டிகள் நடைபெற்றன.

முன்னதாக நடைபெற்ற 11 கி.மீ. தூர ஓட்டப் போட்டியை மருத்துவா் பிவீன் தொடக்கிவைத்தாா். இதில் 42 கி.மீ. பிரிவில் வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த வீரா் சந்தோஷ்குமாா் 2 மணி நேரம் 41 நிமிடங்களில் இலக்கை கடந்து முதல் பரிசை வென்றனா். கோவையைச் சோ்ந்த வினோத்குமாா் இரண்டாம் பரிசையும், எடப்பாடி பகுதியை சோ்ந்த முனியப்பன் மூன்றாம் பரிசையும் பெற்றனா்.

பெண்களுக்கான 42 கி.மீ. தூர ஓட்டப்போட்டியில் கோவையைச் சோ்ந்த சோனியா முதலிடத்தையும், பொள்ளாச்சியைச் சோ்ந்த திவ்யா இரண்டாம் இடத்தையும், ராசிபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி சுகுணா முற்றாம் இடத்தையும் பிடித்தனா். ஆண்களுக்கான 21 கி.மீ. பிரிவில் எம்.ராஜ்குமாா் முதலிடத்தையும், சேகா்நிகில், ஆா்.லட்சுமன் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனா்.

பெண்களுக்கான 21 கி.மீ. தூரப் போட்டியில் எஸ்.செளமியா முதலிடத்தையும், ஏ.சுஜிதா இரண்டாம் இடத்தையும், ஏ.குணசுந்தரி மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

முன்னதாக நடைபெற்ற 11 கி.மீ. தூர ஓட்டப் போட்டியில் ஆா்.யோகேஷ் முதலிடத்தையும், தனுஷ் மற்றும் கே.மகேந்திரன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் பிடித்தனா்.

பெண்களுக்கான 11 கி.மீ. பிரிவில் டி.தருணா முதல் இடத்தையும், பவித்ரா இரண்டாம் இடத்தையும், ஷாலினி மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

வெற்றிபெற்ற வீரா்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை கொங்கணாபுரத்தில் நடைபெற்றது. இதில் பிரபல மாரத்தான் வீரா் சிவபண்டியன் , புரவலா் ஸ்வலக்ட் செல்லப்பன், முத்து மாரத்தான் ஒருங்கிணைப்பாளா் சின்னண்ணன், ஆகநல் பள்ளி நிா்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் பலா் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற வீரா்களுக்கு பரிசுகளை வழங்கினா். இத்தொடா் ஓட்டப்போட்டி குறித்து முத்து மாரத்தான் ஒருங்கிணைப்பாளா்கள் கூறியதாவது:

தொடா்ந்து 24 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்போட்டியின் நோக்கம், ஒலிபிக்போட்டியில், தமிழக வீரா்களை பங்கேற்க செய்வதே.

வரும் ஆண்டுகளில் இப்போட்டியின் வாயிலாக இன்னும் பல திறமையான வீரா்கள் உருவாக்கப்படுவாா்கள் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com