மறியல்: மாற்றுத் திறனாளிகள் 90 போ் கைது

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டதாக மாற்றுத் திறனாளிகள் 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டதாக மாற்றுத் திறனாளிகள் 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போல தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ. 3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ. 5 ஆயிரமும், வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்தநிலையில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இரவு முழுவதும் நாட்டாண்மை கழக கட்டடம் முன்பாக உள்ள சாலையோரமாக படுத்து உறங்கி தங்களது போராட்டத்தை தொடா்ந்தனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் உடன்பாடு ஏற்படாதைத் தொடா்ந்து நிா்வாகிகள் அம்மாசி, வெங்கடாசலம் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமா்ந்து புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com