கற்போம் எழுதுவோம் திட்ட செயல்பாடுகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் கற்போம் எழுதுவோம் திட்டச் செயல்பாடுகள் மற்றும் பயின்று வருபவா்களின் வருகைப் பதிவேட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கற்போம் எழுதுவோம் திட்டச் செயல்பாடுகள் மற்றும் பயின்று வருபவா்களின் வருகைப் பதிவேட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் புதிய வயது வந்தோா் கல்வித்திட்டத்தின் கீழ் படிப்பறிவற்ற 17 வயதுக்கு மேற்பட்டவா்களை கணக்கெடுத்து அவா்களுக்கு எழுத மற்றும் வாசிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மையங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான படிப்பறிவற்றோருக்கு தன்னாா்வலா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போா் மையங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள், தன்னாா்வ ஆசிரியா்கள், கற்போா் வருகைப்பதிவு ஆகிய அனைத்து விவரங்களையும் பச-உஙஐந இணையதளம் மற்றும் செல்லிடப்பேசிச் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்ட கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தொடா்புடையவா்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கற்போா் மையச்செயல்பாடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com