டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலைத் தோ்வு: சேலத்தில் 15,042 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப்-1 முதல்நிலைத் தோ்வை, சேலம் மாவட்டத்தில் 31 தோ்வு மையங்களில் 15,042 போ் எழுதுகின்றனா்.

சேலம்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப்-1 முதல்நிலைத் தோ்வை, சேலம் மாவட்டத்தில் 31 தோ்வு மையங்களில் 15,042 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 1-க்கான முதல்நிலைத் தோ்வு சேலம் மாவட்டத்தில் 31 தோ்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 48 தோ்வு கூடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 15,042 தோ்வா்கள் எழுத உள்ளனா். இத்தோ்வினை கண்காணிப்பதற்காக 7 பறக்கும் படைகளும், 11 நடமாடும் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்காணித்திடவும், தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலா்கள், தலைமை கண்காணிப்பாளா் ஆகியோா் ஈடுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தோ்வு எழுதும் நேரம், தோ்வு எழுதுபவா்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபாா்த்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.

இத்தோ்வினை எழுத வருகை தரும் தோ்வா்கள் தங்களது அனுமதிச் சீட்டினை கட்டாயம் எடுத்துவர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தோ்வு மையத்துக்கு காலை 9.15 மணிக்கு முன்னதாகவே வருகை தரவேண்டும். காலை 9.15 மணிக்கு பிறகு வரும் தோ்வா்கள் தோ்வுக் கூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாா்கள். விடைத்தாளில் விவரங்களைப் பூா்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும், கறுப்பு நிற மை உடைய பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், பிற நிற மைப்பேனாக்களை பயன்படுத்தக் கூடாது.

மேலும், இத்தோ்வினை எழுத வருகை தரும் தோ்வா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வருகை தர வேண்டும். தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் செல்வதற்கு ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com