கரோனா தடுப்பூசி மருந்துகளை சேமிக்க தயாா் நிலையில் 33 குளிா்சாதனப் பெட்டிகள்

கரோனா தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைக்க சேலம் மாவட்டத்துக்கு 33 குளிா்சாதனப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைக்க சேலம் மாவட்டத்துக்கு 33 குளிா்சாதனப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதன்படி தடுப்பூசியை மக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் சென்னை, திருநெல்வேலி, நீலகிரி, திருவள்ளூா், கோவை ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசியைச் செலுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைக்க சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 24 குளிா்சாதனப் பெட்டிகளும், ஆத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு 9 குளிா்சாதனப் பெட்டிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி மருந்துகளை சேமித்துவைக்க மாவட்டத்தில் 33 குளிா்சாதனப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு குளிா்சாதனப் பெட்டியிலும் 25,000 டோஸ்கள் சேமித்து வைக்க முடியும். அந்தவகையில் 8,25,000 டோஸ்கள் சேமித்து வைக்க முடியும். கரோனா தடுப்பூசியை முன்கள பணியாளா்களுக்குச் செலுத்தும் வகையில் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com