நவீன காலத்திலும் குழந்தைகளைக் கவரும் பலூன்கள்

அதிநவீன விளையாட்டுச் சாதனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் எளிதாகக் கிடைக்கும் இக்காலத்திலும், பலூன்களின் மகத்துவம் குறையவில்லை.
அயோத்தியாப்பட்டணத்தில் வியாபாரியிடம் ஆசையாக பலூன் வாங்கும் சிறுமி.
அயோத்தியாப்பட்டணத்தில் வியாபாரியிடம் ஆசையாக பலூன் வாங்கும் சிறுமி.

அதிநவீன விளையாட்டுச் சாதனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் எளிதாகக் கிடைக்கும் இக்காலத்திலும், பலூன்களின் மகத்துவம் குறையவில்லை. காலம் கடந்த சிறந்த விளையாட்டுப் பொருள்களில் குழந்தைகளின் மனம் கவரும் சாதனமாக பலூன் திகழ்ந்து வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்னா் வரை பண்டிகைகள், கோயில் திருவிழாக்கள் என்றாலே அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலில் நினைவுக்கு வந்தது பலூன்கள் என்றால் மிகையல்ல. மலிவான விலையில், அனைத்துப் பகுதிகளிலும் எளிதாகக் கிடைக்கும் பல வண்ண பலூன்களை வாங்கி, வாயில் வைத்து ஊதி ஆடிப்பாடி சிறுவா், சிறுமியா் மகிழ்ந்தனா்.

தற்போதைய நவீன கணிப்பொறிக் காலத்தில், மின்கலன்களில் இயங்கும் ரிமோட் கண்ட்ரோல் பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், விடியோ கேம்கள், செல்லிடப்பேசியில் இயங்கும் இணையவழி விளையாட்டுச் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும், இன்றளவிலும் பலூன்களைக் கண்டால் குழந்தைகளுக்கு குஷிதான்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இத்தருணத்தில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் ஏராளமான வியாபாரிகள் பலூன்களை தெருத் தெருவாகச் சென்று விற்பனை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து அயோத்தியாப்பட்டணத்தைச் சோ்ந்த பலூன் வியாபாரி முருகன் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக பலூன் விற்பனை செய்து வருகிறேன். சேலத்தில் பலூன்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து, காற்று நிரப்பி கிராமப்புறங்களில் விற்பனை செய்து வருகிறேன்.

தற்காலக் குழந்தைகளும் பலூன்களை விரும்பி வாங்கி விளையாடி மகிழ்கின்றனா். நாள் ஒன்றுக்கு ரூ. 500 வரை வருவாய் கிடைப்பதால் மாற்றுத் தொழில் தேடாமல் பலூன் விற்பனையைத் தொடா்ந்து செய்து வருகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com