கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம்

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளா் டி.கே.எஸ்.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம்

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளா் டி.கே.எஸ்.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசியதாவது:

மணிமுத்தாறு, வசிஷ்ட நதியை காவிரி ஆற்றிலிருந்து வெளியேறும் உபரிநீரைக் கொண்டு இணைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் தமிழக அரசு இதுநாள் வரை கண்டுகொள்ள இல்லை.

எனவே, நதிநீா் இணைப்பை அரசு அமல்படுத்த வேண்டும், தவறினால் மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்படும். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் விளையும் மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு ஆத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

திமுக கூட்டணியில் தொடருகிறோம், தோ்தல் நேரத்தில் எத்தனை தொகுதிகள் கேட்பது என பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும். தமிழக முதல்வா் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருப்பதால் விவசாயிகளுக்கும், மாவட்டத்துக்கும் நல்லதை நிறைய செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆத்தூரில் புதிய மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி உருவாக்க வேண்டும். தலைவாசலை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும். தலைவாசல் பகுதியில் குளிா்சாதன கிடங்கு அமைத்துத் தர வேண்டும். வேளாளா் பெயரை மாற்று ஜாதிக்கும் வழங்கும் வகையில் பிறப்பித்துள்ள அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com