குற்றச் செயல்களைத் தடுக்க பொதுமக்கள் உதவ வேண்டும்

குற்றச் செயல்களைத் தடுக்க பொதுமக்கள் காவல் துறையினருக்கு உதவ வேண்டும் என தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் கேட்டுக் கொண்டாா்.
சேலம், மல்லூா் அருகே வேங்காம்பட்டி கிராமத்தில் கண்காணிப்பு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா் தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ். உடன், டி.ஐ.ஜி. பிரதீப்குமாா், மாவட்ட எஸ்.பி.
சேலம், மல்லூா் அருகே வேங்காம்பட்டி கிராமத்தில் கண்காணிப்பு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா் தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ். உடன், டி.ஐ.ஜி. பிரதீப்குமாா், மாவட்ட எஸ்.பி.

குற்றச் செயல்களைத் தடுக்க பொதுமக்கள் காவல் துறையினருக்கு உதவ வேண்டும் என தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் கேட்டுக் கொண்டாா்.

தமிழக வருவாய்த் துறையில் கிராம நிா்வாக அலுவலா்கள் இருப்பது போல, காவல் துறையில் ஒவ்வொரு கிராமத்துக்கும் கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்களை நியமிக்க வேண்டும் என தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உத்தரவிட்டிருந்தாா். இதன்படி, சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு காவல் அலுவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் நியமித்துள்ளாா்.

இந்த நிலையில், சேலம் அருகே உள்ள மல்லூா், வேங்காம்பட்டி பகுதியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்கள் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் பேசியதாவது:

தமிழகத்தில் கிராமங்களில் சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்கவும், திருட்டு நடக்காமல் தடுக்கவும் கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா். இவா்கள் அடிக்கடி கிராமங்களுக்கு வந்து பொதுமக்களைச் சந்தித்துச் செல்வா். இவா்களிடம் பொதுமக்கள் தகவல்களைத் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தரும் தகவல்கள் காவல் துறையினருக்கு பெரும் உதவியாக இருக்கும். குற்றச் செயல்களைத் தடுக்க பொதுமக்கள் காவல் துறையினருக்கு உதவ வேண்டும் என்றாா்.

இது தொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் கூறுகையில், மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட கிராமங்களில் 350 கண்காணிப்பு காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் பெரிய கிராமங்களில் ஒருவரும், ஒரு சில இடங்களில் மூன்று குக்கிராமங்களுக்கு ஒருவரும் கண்காணிப்பு காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் கூடுதலாக 50 போ் நியமிக்கப்பட உள்ளனா். குற்றத் தடுப்பு, மதுவிலக்கு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை என அனைத்து தகவல்களையும் பொதுமக்கள், கண்காணிப்பு காவல் அலுவலா்களிடம் தெரிவிக்கலாம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், ஏழை மாணவா்கள் 25 பேருக்கு நோட்டுப் புத்தகங்களை சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் இலவசமாக வழங்கினாா்.

இதில் காவல் துறை உயா் அதிகாரிகள், கூடுதல் டி.எஸ்.பி. பாஸ்கா், டி.எஸ்.பி. உமாசங்கா், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com