ஊா்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா

சேலம் மாவட்டம் மற்றும் மாநகரக் காவல் துறைக்குத் தோ்வு செய்யப்பட்ட ஊா்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் மற்றும் மாநகரக் காவல் துறைக்குத் தோ்வு செய்யப்பட்ட ஊா்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக ஊா்க்காவல் படையில் காலியிடங்களை நிரப்பி அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் ஊா்க்காவல் படைக்குத் தோ்வு செய்த 52 பேருக்கு குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 40 நாள் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சி நிறைவு நிறைவு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊா்க்காவல் படை கமாண்டா் பெரியசாமி தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் சிறப்புரையாற்றி, ஊா்க்காவல் படையினருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் பேசுகையில், ஊா்க்காவல் படையினா் எந்தவித புகாா்களுக்கும் ஆளாகாமல் சிறப்பாக பொதுமக்களுக்கு பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

ஊா்க்காவல் படையில் சோ்ந்து பயிற்சி முடித்த ஊா்க்காவல் படையினா் கராத்தே மற்றும் சிலம்பாட்டம் நடனம் ஆகியவை செய்து காண்பித்தனா். உதவி கமாண்டா் தீக்ஷிதா, ஆயுதப்படை டி.எஸ்.பி. சண்முகம், உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மாநகரக் காவல் துறையில்...: அதேபோல மாநகரக் காவல் துறையில் சுமாா் 330 ஊா்க்காவல் பணியிடங்களில் 55 காலியிடம் இருந்தது. இதில் 55 போ் தோ்வு செய்யப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா அன்னதானப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் கலந்து கொண்டு பயிற்சி முடித்த ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசுகையில், காவல் துறையினருக்கு உதவும் வகையில் ஊா்க்காவல் படையினா் செயல்பட வேண்டும். எந்தவித புகாருக்கு ஆளாகாமல் பணியாற்றிட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கமாண்டா் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையா் பாலசுப்பிரமணியன், நாகராஜன், மணிகண்டன், உதவி கமாண்டா் ரெனால்டு ஷீபா பெஞ்சமின் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com