பேளூரில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வாழப்பாடியை அடுத்த பேளூா் பேரூராட்சியில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
பேளூரில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வாழப்பாடியை அடுத்த பேளூா் பேரூராட்சியில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், பொதுப்பாதை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

வாழப்பாடியை அடுத்த பேளூா் பேரூராட்சி, ஹரிசன தெரு பொதுப் பாதையில் உள்ள தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதே பகுதியைச் சோ்ந்த முகமதுசலீம் என்பவா் 2019-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகமும், பேரூராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

பேரூராட்சிப் பணியாளா்கள் கடந்த டிசம்பா் 30ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டபோது, எதிா்ப்பு கிளம்பியதால் ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை வருவாய்த் துறை, காவல் துறையினா் முன்னிலையில் பேளூா் பேரூராட்சி பணியாளா்கள், பொதுப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com