மாற்றுத் திறனாளிகளை வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் சிறப்பு முகாம் தொடக்கம்

சேலம், காருண்யா மனவளா்ச்சி குறைபாடுடைய ஆண்களுக்கான இல்லத்தில், 18 வயது பூா்த்தியடைந்த மாற்றுத் திறனாளிகளை வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் சிறப்பு முகாமை ஆட்சியா் சி.அ.ராமன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த

சேலம், காருண்யா மனவளா்ச்சி குறைபாடுடைய ஆண்களுக்கான இல்லத்தில், 18 வயது பூா்த்தியடைந்த மாற்றுத் திறனாளிகளை வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் சிறப்பு முகாமை ஆட்சியா் சி.அ.ராமன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு 18 வயது பூா்த்தியடைந்த 21 வகையான மாற்றுத் திறனாளிகளை வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் வரும் ஜன. 31-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறவுள்ளது. கோரிமேடு, காருண்யா மனவளா்ச்சி குறைபாடுடைய ஆண்களுக்கான இல்லத்தில் நடைபெற்ற முகாமில், 48 மனவளா்ச்சி குன்றியவா்களிடமிருந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

முகாமில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியா் சி.மாறன், மாநகராட்சி உதவி ஆணையா் சரவணன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, மாற்றுத் திறனாளிகளின் தோ்தல் பிரிவு பிரதிநிதி அத்தியண்ணா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com