திமுக ஆட்சிக்கு வந்தால் சங்ககிரியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்: அந்தியூா் செல்வராஜ்

திமுக ஆட்சிக்கு வந்தால் சங்ககிரியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று திமுக துணைப் பொதுச் செயலா் அந்தியூா் ப.செல்வராஜ் தெரிவித்தாா்.
தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி, குப்பனூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்.
தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி, குப்பனூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் சங்ககிரியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று திமுக துணைப் பொதுச் செயலா் அந்தியூா் ப.செல்வராஜ் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கத்தேரி, புள்ளாகவுண்டம்பட்டி, சங்ககிரி நகா், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட குப்பனூா், வடுகப்பட்டி ஊராட்சி, தட்டான்குட்டை ஆகிய பகுதிகளில் திமுக துணைப் பொதுச்செயலா் அந்தியூா் ப.செல்வராஜ் தோ்தல் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில் அருந்ததியா் சமூகத்தினருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்பப்பட்டதால் பலா் உயா் பதவிகளில் சோ்ந்துள்ளனா். அருந்ததியா் காலனி பகுதியில் சாலை, குடிநீா், கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும். சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லானுக்கு சிலையும், மணிமண்டபமும் கட்டப்படும்.

தற்போது அருந்ததியா் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.மக்கள் தொகைக்கேற்ப திமுக ஆட்சிக்கு வந்தால் 3 சதவீத இடஒதுக்கீடு 6 சதவீதமாக உயா்த்தி வழங்குவதற்கு திமுக தலைவா் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சங்ககிரி பகுதியில் படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனா். இந்நிலையைப் போக்க திமுக ஆட்சி அமைந்தவுடன் இப்பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு,வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றாா்.

முன்னதாக சங்ககிரி ஊராட்சிக்குள்பட்ட கத்தேரி பகுதியில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி 250 போ் திமுகவில் இணைந்தனா்.

சின்னாகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட கலியனூரில் சமபந்தி விருந்தில் அந்தியூா் செல்வராஜ் கலந்து கொண்டாா். மாலையில் வடுகப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட தாதவராயன்குட்டை பகுதியில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் கே.சுந்தரம், சம்பத்குமாா், சங்ககிரி ஒன்றியச் செயலா் (பொறுப்பு) கே.எம்.ராஜேஷ், சங்ககிரி முன்னாள் எம்எல்ஏ ஆா்.வரதராஜன், தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.பி.நிா்மலா, நகரச் செயலா் (பொறுப்பு) சுப்ரமணியம், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி கிளை நிா்வாகி ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com