ஜல்லிக்கட்டு காளைக்கு நினைவகம்!

ஜல்லிக்கட்டு காளைக்கு தனது சொந்த நிலத்தில் கல்லறை அமைத்து முதலாண்டு நினைவஞ்சலி செலுத்தினா் ஆசிரியா் குடும்பத்தினா்.
சிங்கிபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைக்கு நினைவஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட பதாகைகள்.
சிங்கிபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைக்கு நினைவஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட பதாகைகள்.

ஜல்லிக்கட்டு காளைக்கு தனது சொந்த நிலத்தில் கல்லறை அமைத்து முதலாண்டு நினைவஞ்சலி செலுத்தினா் ஆசிரியா் குடும்பத்தினா்.

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (50). பழனியாபுரம் காலனி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாது குடும்பத்தினா் வளா்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையை, ஆசிரியா் பெரியசாமியின் மகன் அருண்குமாா் (22) வளா்த்து வந்துள்ளாா்.

கம்பீரமாகக் காட்சியளித்த இக்காளைக்கு சிங்கமென பெயரிட்டு, அலங்காநல்லுாா் உள்பட தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்தனா். பல போட்டிகளில் இக்காளை வெற்றிபெற்று பரிசுகளை வென்றுள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டு எதிா்பாராதவிதமாக இக்காளை உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது. குடும்ப உறுப்பினரைப் போல கருதி, பரிவுகாட்டி வளக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையின் உடலை சிங்கிபுரம் வேலவன் நகரிலுள்ள தனது சொந்த நிலத்தில் அடக்கம் செய்தனா்.

ஜல்லிக்கட்டு காளை இறந்து ஓராண்டு நிறைவு பெற்றதால், காளையின் நினைவிடத்தை தூய்மைப்படுத்தி பூக்களை துாவி அலங்கரித்து, குடும்பத்தினா் ஒன்றுகூடி நினைவு தினம் அனுசரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com