வேளாண் செயலிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு
By DIN | Published On : 31st January 2021 02:32 AM | Last Updated : 31st January 2021 02:32 AM | அ+அ அ- |

வேளாண் செயலிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வுAwareness of farmers about agricultural processors
வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வேளாண் கல்வி மற்றும் ஆராயச்சி மைய கல்லுாரியில் இளங்கலை விவசாயம் நான்காமாண்டு படித்து வரும் மாணவா்கள் களப்பணி பயிற்சி பெற வந்துள்ளனா்.
பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தளவாய்ப்பட்டி கிராமத்தில் முகாமிட்டுள்ள இந்த மாணவா்கள் ஹரிஹரன், மனோஜ்குமாா் ஆகியோா் வேளாண்மை சாா்ந்த தகவல்களை வழங்கும் இ-நாம், உழவன், விவசாயம் போன்ற இணைய வழியில் இயங்கும் செல்லிடப்பேசி செயலிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, பயன்படுத்தும் விதம் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை விவசாயிகள் ஆா்வத்தோடு கேட்டறிந்தனா்.