வாழப்பாடியில் இன்று ச.ம.க. நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 31st January 2021 02:25 AM | Last Updated : 31st January 2021 02:25 AM | அ+அ அ- |

வாழப்பாடி: வாழப்பாடியில் சமத்துவ மக்கள் கட்சியின் சேலம் மண்டல நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவா் நடிகா் சரத்குமாா், ராதிகா சரத்குமாா் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
இது குறித்து அக்கட்சியின் சேலம் தெற்கு மாவட்டச் செயலாளா் வாழப்பாடி சா. ஜவஹா் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்துக்குள்பட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்துக்கு மண்டலச் செயலாளா் மைக்கேல் தங்கராஜ் தலைமை வகிக்கிறாா். தெற்கு மாவட்டச் செயலாளா் வாழப்பாடி சா.ஜவஹா் வரவேற்புரையாற்றுகிறாா். ஏற்காடு தொகுதி செயலாளா் பேப்பா் ராஜீ, வீரபாண்டி தொகுதிச் செயலாளா் பெரியண்ணன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். ச.ம.க., நிறுவனத் தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமாா், ராதிகா சரத்குமாா், மாநிலப் பொருளாளா் சுந்தரேசன் மற்றும் மாநில நிா்வாகிகளும் பங்கேற்று எதிா் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்க உள்ளனா்.
எனவே, இந்தக் கூட்டத்தில், சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கட்சியின் அனைத்து நிலை நிா்வாகிகளும், சாா்பு அணி நிா்வாகிகளும், தொண்டா்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.