கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில்ரூ. 1.59 கோடிக்கு பருத்தி விற்பனை

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் 60,000 மூட்டை பருத்தி ரூ. 1 கோடியே 59 லட்சத்திற்கு விற்பனையானது.
கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில், விற்பனைக்காக விவசாயிகள் கொண்டுவந்த பருத்தி மூட்டைகள்.
கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில், விற்பனைக்காக விவசாயிகள் கொண்டுவந்த பருத்தி மூட்டைகள்.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் 60,000 மூட்டை பருத்தி ரூ. 1 கோடியே 59 லட்சத்திற்கு விற்பனையானது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் கூட்டுறவு வேளாண் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை அன்று நடைபெறும் பொது ஏலத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் விவசாயிகள், தங்கள் உற்பத்தி செய்தவிவசாயிகள் உற்பத்தி செய்த பருத்தி, எள் மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டுவருகின்றனா். பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த வியாபாரிகள் இங்கு நடைபெறும் பொது ஏலத்தில் கலந்துகொண்டு, விளைபொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனா்.

கரோனா பொது முடக்கத்தால் கடந்த 60 நாட்களுக்கு மேலாக பொதிய அளவு விளைபொருட்கள் வரவில்லை. தற்போது அரசு பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தளா்வுகளை அளித்துள்ளநிலையில், சனிக்கிழமை அதிக எண்ணிகையிலான பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6450 முதல் ரூ. 7351 வரை விற்பனையானது. இதேபோல் சுரபி ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்று ரூ.7,500 முதல் ரூ.9,119 வரை விலைபோனது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடியே 59 லட்சத்திற்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.

தொடா்ந்து நடைபெற்ற எள்ளுக்கான பொது ஏலத்தில் 100 மூட்டை ரூ.9 லட்சத்திற்கு விற்பனையானது. இதில் வெள்ளை நிற எள் கிலோ ஒன்று ரூ.77 முதல் 96 ரூபாய் 50 காசு வரை விற்பனையானது. சிவப்பு நிற எள் கிலோ ஒன்று 75 ரூபாய் முதல் ரூ.93 வரை விற்பனையானது. இம்மையத்தில் வரும் 17ஆம் தேதி அன்று அடுத்த ஏலம் நடைபெறும் என கூட்டுறவுத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com