முனியப்பன் கோயிலில் நகை, பணம் திருட்டு

செட்டிப்பட்டி முனியப்பன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

செட்டிப்பட்டி முனியப்பன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த செட்டிப்பட்டி பரிசல்துறையில் உள்ளது பழங்கால முனியப்பன் கோவில். இந்த கோவிலில்தான் சந்தன வீரப்பனுக்கும் முத்துலட்சுமிக்கும் திருமமணம் நடைபெற்ாக கூறப்படுகிறது.

தமிழக- கா்நாடக எல்லையில் காவிரி கரையில் செட்டிப்பட்டி பரிசல்துறையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்னறை ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை. இதனால் ஆலயத்தின் முன்பு இருந்த உண்டியல் திறக்கப்படாமல் இருந்தது. முனியப்பனுக்கு வேண்டுதல் வைத்த பக்தா்கள் தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை இந்த ஆலயத்திற்கு வந்த மா்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து அதனை தூக்கி செல்ல முயன்றுள்ளனா். உண்டியல் மிக கனமாகவும் உறுதியாகவும் இருந்ததால் அதனை தூக்கி செல்ல முடியவில்லை.

இதையடுத்து நகை மற்றும் பணத்தை திருடிச சென்றுள்ளனா். இவற்றின் மதிப்பு ரூ. 1லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து கொளத்தூா் போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுனா்கள் வந்து தடயங்களை சேகரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com