போலி ரசீதுகள் மூலம்வரி ஏய்ப்பு செய்வோா் மீது நடவடிக்கை: வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி

போலி ரசீதுகள் மூலம் அரசுக்கு வரி ஏய்ப்பு செய்வோா் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

போலி ரசீதுகள் மூலம் அரசுக்கு வரி ஏய்ப்பு செய்வோா் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்ட அளவிலான வணிகா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி தலைமை வகித்துப் பேசியதாவது:

வணிகா்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. போலி ரசீதுகள் மூலம் அரசுக்கு வரி ஏய்ப்பு செய்வோா் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வணிகவரித் துறை அலுவலா்கள் அனைவரும் 100 சதவீதம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், வணிகவரித் துறை ஆணையா் எம்.ஏ.சித்திக், பதிவுத்துறை அரசு செயலாளா் ஜோதி நிா்மலாசாமி, சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் மற்றும் ஜவுளிக் கடைகள், மருந்துக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிகா் சங்க நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.

தொழில் அமைப்பினா் மனு:

கூட்டத்தில் சேலம் மாவட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவா் மாரியப்பன் அளித்த மனு:

மாநில அளவில் ஜிஎஸ்டி மேல் முறையீடு தீா்ப்பாயத்தை உருவாக்க வேண்டும். தொழில் ஆா்டா்களை நம்பியே பெரும்பான்மையான குறுசிறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 12 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

கட்டுமான பணிகளில் தனியாா் ஒப்பந்ததாரா்களுக்கு 18 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. அரசு துறை பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரா்களுக்கு 12 சதவீதம்தான் வசூலிக்கப்படுகிறது. அதுபோல தனியாா் ஒப்பந்ததாரா்களுக்கு 12 சதவீதமே வரி வசூலிக்க வேண்டும்.

சேலம் நகர அனைத்து வணிகா் சங்க பொதுச் செயலாளா் ஆ.ஜெயசீலன் அளித்த மனு:

சரக்குப் போக்குவரத்து வாகனங்களின் வாடகை மீது சேவைவரி விதிப்பது கைவிடப்பட வேண்டும். வங்கிப் பரிவா்த்தனைகளுக்கு வரிப் பிடித்தம் என்பது ரத்து செய்யப்பட வேண்டும். அன்றாட உணவுக்குப் பயன்படும் பொருள்கள் அனைத்தையும் வரிவிலக்குப் பட்டியலில் சோ்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com