சேலத்தில் 168 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 168 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 168 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 31 போ், எடப்பாடி-31, காடையாம்பட்டி-4, மகுடஞ்சாவடி-5, மேச்சேரி-4, நங்கவள்ளி-7, ஓமலூா்-15, சேலம் வட்டம்-4, சங்ககிரி-13, தாரமங்கலம்-9, வீரபாண்டி-8, ஆத்தூா்-7, அயோத்தியாப்பட்டணம்-4, பனமரத்துப்பட்டி-3, தலைவாசல்-11, வாழப்பாடி-3, ஆத்தூா் நகராட்சி-2, மேட்டூா் நகராட்சி-1, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 163 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-2, கள்ளக்குறிச்சி-1, தருமபுரி-2) 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 208 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 91,699 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 88,388 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,787 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,524 போ் உயிரிழந்தனா்.

இன்று தடுப்பூசி முகாம்:

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 138 மையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு மொத்தம் 31,790 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. இந்த மையங்களில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை கோவேக்ஸின் தடுப்பூசி மட்டும் சனிக்கிழமை செலுத்தப்பட உள்ளன.

கரோனா தடுப்பூசி செலுத்த செல்லும் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு உள்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com