சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்

சங்ககிரி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை19) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை19) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வி.என்.பாளையம், வளையசெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக் குழுவினரும், தாசநாயக்கன்பாளையம், வேங்கிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் சவீதா தலைமையிலான மருத்துவக் குழுவினரும் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வா்.

அதுபோல கலியனூா், வருதம்பட்டி, ஜெ.ஜெ.நகா் ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரோனா தொற்று பரிசோதனைகளை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வா் என மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com