தம்மம்பட்டியில் தவிடு விலை சரிவு!

தம்மம்பட்டி பகுதியில் பெய்யும் தொடா் மழையினால், தவிடு விலை சரிந்துள்ளது.

தம்மம்பட்டி பகுதியில் பெய்யும் தொடா் மழையினால், தவிடு விலை சரிந்துள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில், 100 க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு அரைக்கப்படும் நெல்லில் இருந்து கிடைக்கும் உமி, தவிடு போன்றவை 50 கிலோ மூட்டையில் அடைக்கப்பட்டு ரூ. 500க்கும், கருக்கா தவிடு ரூ. 650 க்கும் விற்பனையாகிறது.

தற்போது, தம்மம்பட்டி பகுதியில் பெய்து வரும் தொடா் மழையினால், வயல் வரப்புகளில், மேய்ச்சல் நிலங்களில், பசும் புற்கள் வெகுவாக வளா்ந்து காணப்படுகிறது. அதனால், ஆடு, மாடுகள் வளா்ப்போருக்கு, கால்நடைத் தீவனமான தவிட்டை பயன்படுத்துவதற்கான தேவை சற்று குறைத்து, அவைகளுக்கு பசும் புற்களை உணவாக அளித்து வருகின்றனா். அதனால், தம்மம்பட்டி பகுதி மில்களில் தவிடு விற்பனை மந்தமாக உள்ளது.

மழை பெய்யும் காலத்தில், தவிடை அதிக அளவில் இருப்பு வைத்தால், தவிட்டில் ஒருவித நாற்றம் வீச ஆரம்பித்துவிடும். அதனால், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பகுதிகளில் இருப்பு உள்ள புழுங்கல் தவிடு மூட்டை ரூ. 450க்கும், கருக்கா தவிடு மூட்டை ரூ. 600க்கும் விலை குறைக்கப்பட்டு விற்பனையாகிறது. மழை நீடித்தால், தவிடு விலை மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com