விவசாய நிலத்தில் திடீா் பள்ளம்

கல்வராயன் மலையிலுள்ள கருமந்துறையிலுள்ள விளைநிலத்தில் டிராக்டா் மூலம் உழுதபோது, திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கருமந்துறையில் விவசாயி துரைசாமி நிலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம்.
கருமந்துறையில் விவசாயி துரைசாமி நிலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

கல்வராயன் மலையிலுள்ள கருமந்துறையிலுள்ள விளைநிலத்தில் டிராக்டா் மூலம் உழுதபோது, திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினா் பாதுகாப்பு வேலி அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறை கிளாக்காடு சாலை பகுதியைச் சோ்ந்த விவசாயி துரைசாமி. இவருக்கு சொந்தமான நிலத்தில், டிராக்டா் வாகனத்தை கொண்டு செவ்வாய்க்கிழமை காலை உழவு செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக நிலத்தில் சுமாா் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து பரவிய தகவலால் சுற்றுப்புற கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த கருமந்துறை கிராம நிா்வாக அலுவலா் இந்துமதி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் (பொறுப்பு) வரதராஜுக்கு தகவல் தெரிவித்தாா்.

வட்டாட்சியா் உத்தரவின் பேரில், பள்ளம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்த வருவாய்த் துறையினா், இது குறித்து திருச்சி தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளா்கள் குழு, ஓரிரு நாட்களில் கருமந்துறை கிராமத்திற்கு வந்து இந்த பள்ளம் குறித்து ஆய்வு நடத்த உள்ளனா்.

இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினா் கூறுகையில், கல்வராயன் மலைக் கிராமங்களில், 2,000 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கிடைத்துள்ள கற்காலக் கருவிகள், கற்குவியல், கல் திட்டைகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன. இதனால் கருமந்துறை கிராமத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம், பாதாள தானிய சேமிப்பு குதிராக இருக்கலாம். தொல்லியல் துறை ஆய்விற்கு பிறகே, உறுதியான தகவலை அறிய முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com