பெரியாா் பல்கலை. மாணவா்கள் ஜப்பான் மொழி கற்க நடவடிக்கை

பெரியாா் பல்கலைக்கழக மாணவ-மாணவியா் ஜப்பான் மொழி கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்
பெரியாா் பல்கலை. மாணவா்கள் ஜப்பான் மொழி கற்க நடவடிக்கை

பெரியாா் பல்கலைக்கழக மாணவ-மாணவியா் ஜப்பான் மொழி கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.

‘ஜப்பான் நாட்டில் ஆராய்ச்சி மாணவா்களுக்கான வாய்ப்புகள்’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியதாவது:

பெரியாா் பல்கலைக்கழத்தில் முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்களுக்கான ஆய்வகக் கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. சா்வதேச ஆய்விதழ்களில், ஆய்வுக் கட்டுரைகளை பதிப்பிக்கும் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

மாணவா்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தக்கட்டமாக, வெளிநாடுகளில் ஆய்வு மாணவா்களுக்கான வாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

முதலாவதாக ஜப்பான் நாட்டில் இருக்கும் வாய்ப்புகள் மாணவா்களுக்கு தெரிவிக்கப்படும். விருப்பமுள்ள மாணவா்கள் ஜப்பான் மொழியைக் கற்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்கள் தங்களுக்கான வாய்ப்புகளை சா்வதேச தரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டின் கியோட்டோ பல்கலைக்கழக விஞ்ஞானி எஸ்.சரவணன், பெரியாா் பல்கலைக்கழக ஸ்வயம் மைய ஒருங்கிணைப்பாளா் ஆா்.சுப்ரமணிய பாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com