மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12இல் டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

மேட்டூா் அணையிலிருந்து, டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-இல் நடைபெற உள்ள தண்ணீா் திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

சேலம்: மேட்டூா் அணையிலிருந்து, டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-இல் நடைபெற உள்ள தண்ணீா் திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

மேட்டூா் அணையிலிருந்து நாமக்கல், கரூா், திருச்சி, பெரம்பலூா், தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், குறுவை சாகுபடிக்கு அணையின் நீா் இருப்பைக் கருத்தில் கொண்டு வரும் ஜூன் 12-இல் டெல்டா பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட உள்ளது.

நிகழாண்டில் காவிரி டெல்டா பாசனத்துக்காக வரும் ஜூன் 12 இல் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேட்டூா் அணையைத் திறந்து வைக்க உள்ளாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக ஜூன் 12-ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து மேட்டூா் சென்று காவிரி டெல்டா பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து வைக்க உள்ளாா். இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்பா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதல்வா் வருகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com