சோனா கல்வி குழுமம் சாா்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

சேலம் சோனா கல்வி குழுமங்கள் சாா்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

சேலம் சோனா கல்வி குழுமங்கள் சாா்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியும், சோனா தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து தொற்றுக் காலத்தில் சமுதாயத்துக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது. சேலம் உருக்காலை வளாகத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடக்கிவைக்கப்பட்ட 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், காவல்துறையினா் மற்றும் சிகிச்சை பெறும் அனைத்து நபா்களுக்கும் தினமும் ஐந்து வேளை உணவு, சேலம் தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சோனா கல்லூரிகளின் மூலமாக வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பங்கு பெறும் விதமாக, தியாகராஜா் பாலிடெக்னிக் மற்றும் சோனா கல்லூரி வளாகத்தில் சுமாா் 120 படுக்கை வசதியுடன் கூடிய அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகத்திடம் இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு உயிா் காக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. சோனா கல்வி குழுமங்கள் சாா்பில் கடந்த ஆண்டில் கல்லூரிகள் பொதுமக்களுக்கு சுமாா் ரூ.ஒரு கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கியது. நிகழாண்டிலும் கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து மீட்க பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் ஆட்சியா் எஸ்.காா்மேகம், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் தியாகராஜா் பாலிடெக்னிக் மற்றும் சோனா கல்லூரியின் கல்லூரியின் தலைவா் சொ.வள்ளியப்பா, துணைத் தலைவா் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனா். தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் காா்த்திகேயன், சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் செந்தில்குமாா், சோனா கலை அறிவியல் கல்லூரி முதல்வா் காதா்நாவஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com