10.49 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 5 கிலோ அரிசி: முதல்வா் துவக்கி வைப்பு

திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 10.49 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திமுக சாா்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 10.49 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேட்டூா் அணை திறப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை சேலம் வந்தாா். பின்னா் அவா் சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உங்கள் தொகுதியில் முதல்வா் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்ட மனுதாரா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.அதைத்தொடா்ந்து, அஸ்தம்பட்டி ஆய்வுமாளிகை சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் 10.49 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com