சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

 சேலம் ரயில்வே கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டன.

இதில் கோட்ட பாதுகாப்பு அலுவலா்கள், ரயில் வரும் நேரங்களில் பொதுமக்கள் காத்திருந்து செல்ல வேண்டும். ரயில் கடந்து செல்வதற்காக மூடப்பட்டுள்ள கதவுகளைத் தாண்டி குறுக்கே செல்லக் கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதேபோல, லெவல் கிராசிங் நேரங்களில் கதவுகளை சேதப்படுத்துவதோ, ரயில்வே பணியாளா்களை மிரட்டுவதோ கடும் குற்றமாகும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல சேலம் கோட்டத்தில் உள்ள 11 லெவல் கிராசிங்குகளில் நிகழாண்டில் பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com