எடப்பாடியில் தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடக்கம்

எடப்பாடி ஒன்றிய, நகரப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது.

எடப்பாடி ஒன்றிய, நகரப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் ஏ.சந்திரமோகன் கூறியதாவது:

எடப்பாடி ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மையத்துக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், குழந்தை பெற்ற தாய்மாா்கள், வயதான முதியோா் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசி செலுத்தப்படும். கடுமையான இணை நோய்கள் உள்ளவா்கள் சம்பந்தப்பட்ட மருத்துவ மையத்தில் உள்ள மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்ட பிறகு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்படுகின்றனா்.

திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் எடப்பாடி ஒன்றியம், சித்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு-250, கோவேக்சின்-50, செட்டிமாங்குறிச்சி, தாதாபுரம், பூலாம்பட்டி, பக்கநாடு, கோனேரிப்பட்டி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா கோவிஷீல்டு-100, கோவேக்சின் - 20 என்ற எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

அதுபோல வெள்ளாண்டி வலசு பகுதியில் உள்ள எடப்பாடி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு - 200, கோவேக்சின்-50 என்ற எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. தடுப்பூசி முகாமுக்கு வருவோா் நோய்க் கட்டுப்பாட்டு விதிகளைக்க கடைப்பிடித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com