சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் சிறப்பு முகாம்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொமரநல்லிபாளையம் காலனி, பாப்பநாயக்கனூா், அக்கமாபேட்டை, வி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவக் குழுவினா், நல்லாம்பாளையம், மொத்தையனூா், சன்னியாசிப்பட்டி பவா்ஹவுஸ், சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்கின்றனா்.

இதேபோல ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செட்டிப்பட்டி, காட்டகவுண்டனூா், மேட்டுக்கடை, நல்லங்கியூா் ஆகிய பகுதிகளில் மருத்துவா் ரேவதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com