சேலம் அருகே கரும்புத் தோட்டத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம்? 

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை புகுந்து இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் அருகே கரும்பு தோட்டம்.
சேலம் அருகே கரும்பு தோட்டம்.

சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை புகுந்து இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பைபாஸ் அருகில் உள்ளது கோனேரிக்கரை. தேசிய நெடுஞ்சாலை பகுதியை ஒட்டிய சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கரும்பு தோட்டம் உள்ளது .இந்த நிலையில் தோட்டத்தின் உரிமையாளர் தங்கவேல் சனிக்கிழமை மாலை கரும்பு தோட்டத்தை பார்வையிட வந்தார். அப்போது தோட்டத்திற்கு முன்பாக குடியிருக்கும் வனிதா என்பவர் கரும்பு தோட்டத்திற்குள் புலி இருப்பதாகக் கூறி இருக்கிறார்.

இதையடுத்து தங்கவேல் வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் . இதையடுத்து சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கரும்பு தோட்டத்தில் கண்காணித்தனர். அப்போது சில இடங்களில் பதிவான கால் தடங்களை வைத்து பார்த்த போது அது புலியின் கால் தடமல்ல, சிறுத்தையின் கால் தடமாக இருக்கலாம் என கருதி வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையடுத்து சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். குடியிருப்பு பகுதிகள் நிறைந்துள்ள கந்தம்பட்டி பகுதியில் கரும்பு காட்டுக்குள் சிறுத்தை புகுந்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com