சேலத்தில் சமூக சேவகி மா்மமான முறையில் கொலை
By DIN | Published On : 13th March 2021 12:08 PM | Last Updated : 13th March 2021 12:08 PM | அ+அ அ- |

சேலம்: சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் சமூக சேவகி உமை பானு மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
சேலம், அம்மாப்பேட்டை பாலாஜி நகரைச் சோ்ந்தவா் பாஷா. இவரது மனைவி உமை பானு (45). இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். இதில் முதல் மகள் திருமணமாகி சென்றுவிட்டாா். இரண்டாவது மகள் தமீனா தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பாஷா தனது மகளை கல்லூரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தாா். அப்போது உமை பானு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தாா். இதுதொடா்பாக அம்மாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.
விசாரணையில் உமை பானு வீட்டுக்கு அடையாளம் தெரியாத நான்கு போ் வந்து சென்றது தெரியவந்தது. இந்த நபா்கள் குறித்து அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ காட்சிகளை கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.