முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சங்ககிரி: மாவெளிபாளையம் தரைவழி பாலத்தில் முள் செடிகள் அகற்றம்
By DIN | Published On : 14th March 2021 04:22 PM | Last Updated : 14th March 2021 04:22 PM | அ+அ அ- |

கருவேலம் முள் செடிகள், களர்செடிகளை அகற்றிய பின் தரைவழி பாலத்தில் முன், பின் தோற்றங்கள்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள மாவெளிபாளையம் ரயில்வே தரைவழி மூன்று பாலங்கள் உள்ளது. அதில் ஒரு பாலம் மட்டுமே மக்கள் பயன்பாட்டிற்கு உள்ளது. மற்ற இரு பாலங்களின் உள், வெளி புறங்களில் கருவேலம் முள்செடிகள், தேவையற்ற களர் செடிகள் முளைத்து மக்கள் பயன்படுத்தாத நிலையில் இருந்ததை பொதுமக்கள் வேண்டுகோளையடுத்து சங்ககிரி பப்ளிச் சேரிடபுள் டிரஸ் நிர்வாகிகள் அவைகளை ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
சங்ககிரி அருகே உள்ள மாவெளிபாளையத்தில் மூன்று ரயில்வே தரைவழி பாலங்கள் உள்ளன. இரண்டு பாலங்களில் கருவேலம் முள் செடிகள், தேவையற்ற களர் செடிகள் முளைத்துள்ளன. அதனையடுத்து கடந்த சில வருடங்களாக அவைகளை பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். பயன்படுத்தாத பாலங்களில் மது அருந்தும் கூடமாக சிலர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதில் ஒரு பாலத்தை மட்டும் மாவெளிபாளையம், ஊஞ்சானூர், பச்சப்பட்டி, வளையசெட்டிபட்டி, உப்புப்பாளையம், வடுகப்பட்டி, பாப்பநாயக்கனூர், தட்டாம்பட்டி வேப்பம்பட்டி, சென்னாத்கல் கரட்டுப்புதூர், காஞ்சாம்புதூர், தாதவராயன்குட்டை, நாயக்கன்வளவு, கருமாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் பயன்படுத்தி அந்தந்த ஊர்களுககு சென்று வருகின்றனர். இந்நிலையில் மற்ற இரண்டு பாலங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் பொதுநல அமைப்பிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனையடுத்து சங்ககிரி பப்ளிச் சேரிடபுள் டிரஸ் தலைவர் எ.ஆனந்தகுமார் தலைமையில் செயலர் ராகவன், பொருளாளர் கணேஷ், நிர்வாகிகள் முரளி, முருகேசன், சரவணன், வெங்கடேஷ், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், கதிர்வேல், கிஷோர்பாபு, பொறியாளர் வேல்முருகன், ராமச்சந்திரன், விஜய், மாரியப்பன் உள்ளிட்ட பலர் தரைவழி பாலத்திற்குள் வளர்ந்திருந்த கருவேலம் முள் செடிகள், தேவையற்ற களர் செடிகளை அகற்றி சுத்தப்படுத்தினர். அடுத்த வாரம் மூன்றாவது தரை பாலம் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.