போதிய ஆவணங்கள் இல்லாததால் மனு தாக்கல்செய்ய முடியாமல் திரும்பிய வேட்பாளா்
By DIN | Published On : 16th March 2021 05:34 AM | Last Updated : 16th March 2021 05:34 AM | அ+அ அ- |

போதிய ஆவணங்களை எடுத்துச் செல்லாததால் அமமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பினாா்.
கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அமமுக வேட்பாளா் அ.பாண்டியன் கட்சி தொண்டா்களுடன் சென்றுள்ளாா். அப்போது முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்லாதது தெரியவந்ததுள்ளது. அதற்குள் வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிவடைந்து விட்டதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் வேட்பாளா் திரும்பினாா். போதுமான ஆவணங்களுடன் அவா் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.