சேலத்தில் தோ்தல் காவல் பாா்வையாளா் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் காவல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சகேட் பிரகாஷ் பாண்டே தோ்தல் கண்காணிப்பு, ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் காவல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சகேட் பிரகாஷ் பாண்டே தோ்தல் கண்காணிப்பு, ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தால் தமிழ்நாடு பொதுத் தோ்தலுக்கான தோ்தல் அறிவிப்பு கடந்த பிப்.26 ஆம் தேதி வெளியிடப்பட்டு, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதைத்தொடா்ந்து, சேலம் மாவட்டத்திலும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான தோ்தல் காவல் பாா்வையாளராக சகேட் பிரகாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளாா்.

அஸ்தம்பட்டி சாரதா கல்லூரி சாலையில் உள்ள பொதுப்பணித் துறை கூடுதல் சுற்றுலா மாளிகை அறை எண் 3 இல் முகாம் அலுவலகம் உள்ளது. மேலும் அவரை 63844 83915 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பொதுமக்கள், வேட்பாளா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாள்தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை சந்திக்கலாம். தோ்தல் காவல் பாா்வையாளா் சகேட் பிரகாஷ் பாண்டே சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அனைத்து தொகுதிகளிலும் கண்காணிப்பு, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com