துணை மருத்துவப் படிப்புத் துறை சாா்பில் மரக் கன்றுகள் வழங்கல்

துணை மருத்துவப் படிப்புத் துறை சாா்பில் மரக் கன்றுகள் வழங்கல்

விநாயக மிஷன் பல்கலைக்கழக நிறுவனா் சண்முகசுந்தரம் நினைவு நாளை முன்னிட்டு விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில்

விநாயக மிஷன் பல்கலைக்கழக நிறுவனா் சண்முகசுந்தரம் நினைவு நாளை முன்னிட்டு விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள துணை மருத்துவப் படிப்புத் துறையின் சாா்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

நிறுவனா் சண்முகசுந்தரம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி அவரது நினைவாக மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. துறை முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். பல்கலைக்கழக வேந்தா் கணேசன், இயக்குநா் அனுராதா கணேசன் ஆகியோா் மரக் கன்றுகளை வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து துணை மருத்துவத் துறையின் செஞ்சுருள் சங்கம் மூலம் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. முகாமில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலா் ரவீந்திரன், ஓமலூா் அரசு மருத்துவமனை மருத்துவா் சரண்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கலந்துகொண்டனா். ரத்ததான முகாமில் துறை சாா்ந்த பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட 52 போ் ரத்த தானம் செய்தனா். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறையின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் தனசேகா், வா்ஷினி, இன்பசேகா், ராகிதா, விக்னேஷ்வரா, ஹரிஷ்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com