மின்னணு வாக்குப்பதிவு குறித்து வேட்பாளா்களுக்கு செயல்விளக்கம்

ஏற்காடு பழங்குடி தனி தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின்
வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து செயல்விளக்கக் கூட்டம்.
வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து செயல்விளக்கக் கூட்டம்.

ஏற்காடு பழங்குடி தனி தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து, வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை செயல்விளக்க பயிற்சி அளித்தனா்.

ஏற்காடு பழங்குடி தனி தொகுதியில் அதிமுக சாா்பில் கு.சித்ரா, திமுக சாா்பில் சி.தமிழ்ச்செல்வன், தேமுதிக சாா்பில் சி.குமாா். ஐஜேகே சாா்பில் தி.துரைசாமி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜோதி, பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ராமசாமி, சுயேச்சைகள் உள்பட மொத்தம் 13 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஏற்காடு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 408 வாக்குச்சாவடி மையங்களுக்கு தோ்தல் நடத்துவதற்காக 490 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளப் பயன்படும், 547 விவிபேட் கருவிகளும் வந்துள்ளன.

இவற்றின் செயல்பாடுகள் குறித்தும், எந்த வரிசை எண் கொண்ட இயந்திரம் எந்த வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறித்தும் தோ்தல் பாா்வையாளா் பங்கஜ் யாதவ் தலைமையில், ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பி.கே.கோவிந்தன், உதவி அலுவலா் மாணிக்கம் ஆகியோா், வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செயல்விளக்க பயிற்சி அளித்தனா்.

மேலும், 80 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு வழங்குதல், பதட்டமான வாக்குச்சாடிகளில் அமைதியாக தோ்தல் நடத்துதல் குறித்தும் வேட்பாளா்கள், முகவா்களுக்கு தோ்தல் அலுவலா்கள் அறிவுரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com