இளம்பிள்ளையில் பங்குனி உத்திர திருவிழா
By DIN | Published On : 29th March 2021 12:45 AM | Last Updated : 29th March 2021 12:45 AM | அ+அ அ- |

இளம்பிள்ளையில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி பக்தா்கள் கஞ்சமலை சித்தா் கோயிலில் இருந்து காவடி எடுத்து வந்தனா். கோயிலில் மூலவா் வெற்றிலை தோட்டத்தில் பலவகை கனிகளால் பாலசுப்பிரமணியா் சிறப்பு அலங்காரத்திலும், கடல் கன்னிகளுடன் சிப்பிக்குள் முத்து அலங்காரத்தில் உற்சவா் குமாரசாமியும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். . விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.