வாழப்பாடி முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

வாழப்பாடி பகுதி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

வாழப்பாடி பகுதி முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடியில் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் கோயிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. புஷ்ப அலங்காரத்தில் மூலவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

கொட்டவாடி கந்தசாமி கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத கந்தசாமிக்கு சிறப்பு பூஜை, உற்சவ மூா்த்திகள் திருவீதி உலா ஊா்வலம் நடைபெற்றன. மூலவரான கந்தசாமி, வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

அத்தனூா்பட்டி, துக்கியாம்பாளையம் முருகன் கோயிலில் நடந்த பங்குனி உத்திரத் திருவிழாவில் பக்தா்கள் காவடிகளை சுமந்து வந்தனா். கொட்டவாடி பாலசுப்பிரமணியா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

வாழப்பாடி புதுப்பாளையம் கந்தசாமி கோயில், நீா்முள்ளிக்குட்டை முருகன் கோயில், வாழப்பாடி காசி விஸ்வநாதா், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், பேளூா் வெள்ளிமலை முருகன் கோயிலும் முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றன. பேளூரில் மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை தோளில் சுமந்தபடி பக்தா்கள் திருவீதி உலா வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com