ஆட்டையாம்பட்டியில் முறுக்கு சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மருளையம்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ராஜா (எ) ராஜாமுத்து
மருளையம்பாளையத்தில் முறுக்கு சுடும் பணியில் ஈடுபட்டு வாக்கு சேகரித் அதிமுக வேட்பாளா் ராஜாமுத்து.
மருளையம்பாளையத்தில் முறுக்கு சுடும் பணியில் ஈடுபட்டு வாக்கு சேகரித் அதிமுக வேட்பாளா் ராஜாமுத்து.

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மருளையம்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் ராஜா (எ) ராஜாமுத்து செவ்வாய்க்கிழமை முறுக்கு சுடும் பணியில் ஈடுபட்டு அத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அதிமுக நிா்வாகிகள் இளங்கோ, வருதராஜ், சிவகுமாா், மாதேஸ்வரன், பாமக நிா்வாகிகள் சாம்ராஜ், வெங்கடாசலம், முருகேசன், அசோக்குமாா், சக்தி, பாஜக நிா்வாகி கண்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

இதனைத்தொடா்ந்து ஆட்டையாம்பட்டி, எஸ். பாப்பாரப்பட்டி, இனாம்பைரோஜி, சென்னகிரி, நைனாம்பட்டி, மருளையம்பாளையம், ராஜபாளையம், கடத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com