சேலத்தில் இதுவரை ரூ. 3 கோடி பணம் பறிமுதல்

சேலத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 3.23 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

சேலத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 3.23 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து கண்காணிப்பதற்கும், வாகனச் சோதனையில் ஈடுபடுவதற்கும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ஓமலூா், எடப்பாடி, கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூா், சங்ககிரி, மேட்டூா் ஆகிய 11 தொகுதிகளிலும் மொத்தம் 99 பறக்கும் படைகள், 99 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 11 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பிப்ரவரி 26 முதல் மாா்ச் 30 வரை உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 3,22,54,674 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ. 1,43,29,800 மதிப்பிலான 405.730 கிலோ வெள்ளிப் பொருள்களும், ரூ. 36,59,58,048 மதிப்பிலான 237.334 கிலோ தங்கம், 22 தங்க மோதிரங்களும் ரூ. 4,00,615 மதிப்பிலான சேலைகள், வேட்டிகள், சட்டை துணிகள், கொடிகள், ரூ. 2,26,320 மதிப்பிலான 1,805 மதுப் புட்டிகள், ரூ. 2,50,000 மதிப்பிலான 400 தாமிர தட்டுகள், 400 தாமிர ஸ்பூன்கள், 1000 தாமிர கப்புகள் என மொத்தம் ரூ. 38, 11, 64,783 மதிப்பிலான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தில் இதுவரை ரூ. 8,84,290 ரொக்கமும், ரூ. 3,24,950 மதிப்பிலான 4.850 கிலோ கிராம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள், ரூ. 2 லட்சம் மதிப்பிலான 22 தங்க மோதிரங்கள், ரூ. 18,000 மதிப்பிலான 90 சேலைகளும் என மொத்தம் ரூ.5,42,950 லட்சம் மதிப்பிலான சேலை, வெள்ளிப் பொருள்கள், தங்க மோதிரங்கள் உள்ளிட்டவை உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ஆய்வுக் குழுவின் மூலம் சரிபாா்க்கப்பட்டு உரியவா்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலின் வாக்காளா்கள் விவரங்கள், சந்தேகங்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெற்றுள்ளதா என்பது போன்ற தோ்தல் தொடா்பான பல்வேறு தகவல்கள், புகாா்களை குறித்து இந்திய தோ்தல் ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 0427-1950 என்ற எண்ணிற்கு செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை 7,386 அழைப்புகள் வரப்பெற்று அனைத்திற்கும் தீா்வு காணப்பட்டுள்ளது.

மேலும், 1800-425-7020 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு இதுவரை 61 அழைப்புகள் வரப்பெற்று 56 அழைப்புகளுக்கு உரிய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்காளா்கள், பொதுமக்கள் 0427-1950, 1800-425-7020 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு தோ்தல் தொடா்பான புகாா்கள், விவரங்களைக் கேட்டு அறிந்துகொள்வதோடு, தங்கள் புகாா்களையும் பதிவு செய்யலாம்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சி-விஜில் மையத்தில் இதுவரை தோ்தல் விதிமீறல்கள் குறித்து 25 புகாா்கள் பதிவு செய்யப்பட்டன. அது குறித்து உடனடியாக பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுவிதா செயலியின் மூலம் வாகன அனுமதி வேண்டி 6 விண்ணப்பங்கள் வரப்பெற்று அனைத்தும் தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com