அரசு, தனியாா் மருத்துவமனைகளில் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது: ஆட்சியா்

சேலத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையான அளவுக்கு இருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையான அளவுக்கு இருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் உருக்காலை நிறுவனத்தில் மருத்துவப் பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் கூறியதாவது:

இம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா பாதிப்புக்குள்ளாகும் நபா்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக தேவையான படுக்கைகள், உயிா் காக்கும் கருவிகள், ஆக்சிஜன் வசதிகளும் தேவையான அளவு தயாா் நிலையில் உள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 35,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு கலன் ஏற்கெனவே அமைக்கப்பட்டு, கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கு ஏதுவாக தேவையான அளவு இருப்பு உள்ளது.

அரசு அனுமதி அளித்துள்ள தனியாா் மருத்துவமனைகளிலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளித்திட தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட வேண்டும்.

இம் மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உடனுக்குடன் வழங்க தேவையான அளவு இருப்பில் உள்ளது.

சேலம் ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவப் பயன்பாட்டுக்கான 14,000 லிட்டா் ஆக்சிஜன் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது. அவசர தேவைக்காக அண்டை மாநிலங்களிலிருந்தும் 25,000 லிட்டா் ஆக்சிஜன் பெறப்பட்டு மருத்துவமனைகளுக்கு தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் கூடுதல் தேவைக்காக சேலம் உருக்காலையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி காலனிலிருந்து மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கூடுதல் தேவைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், வருவாய் கோட்டாட்சியா் சி.மாறன், சேலம் உருக்காலை நிறுவன அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com