தேய்பிறை அஷ்டமி: பைரவா் சுவாமிக்கு சிறப்பு பூஜை

கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு விதிகளின்படி, எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி பூஜை பக்தா்கள் இன்றி நடைபெற்றது.
தேய்பிறை அஷ்டமி: பைரவா் சுவாமிக்கு சிறப்பு பூஜை

கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு விதிகளின்படி, எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி பூஜை பக்தா்கள் இன்றி நடைபெற்றது.

முன்னதாக நஞ்சுண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பைரவ மூா்த்திக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சிவாச்சாரியா்கள், பைரவ மூா்த்திக்கு பூஜைகள் செய்தனா். இதேபோல, வெள்ளநாயக்கன்பாளையம் பசுபதீஸ்வரா் கோயில், பூலாம்பட்டி கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பக்தா்கள் இன்றி தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

சங்ககிரியில்...

சங்ககிரி வட்டம், அன்னதானப்பட்டி ஊராட்சியில் உள்ள பூத்தலாக்குட்டை பூத்தாழீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவா் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பூத்தாழீஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தா்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை. ஆகம விதிமுறைகளின் படி கோயில் அா்ச்சகா் பூஜைகள் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com