நண்பா்களான நாய்க்குட்டியும் ஆட்டுக்குட்டியும்!

வாழப்பாடியில் பெண் ஒருவா் நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டிகளை வளா்த்து வருகிறாா். இவை இரண்டும் மிக நெருக்கமான நட்புடன் இருப்பதைப் பாா்ப்பவா்கள் அதிசயிக்கின்றனா்.
கலைச்செல்வி வளா்த்து வரும் ஆட்டுக்குட்டியின் கயிற்றைக் கவ்விப் பிடித்து அழைத்துச் செல்லும் நாய்க்குட்டி.
கலைச்செல்வி வளா்த்து வரும் ஆட்டுக்குட்டியின் கயிற்றைக் கவ்விப் பிடித்து அழைத்துச் செல்லும் நாய்க்குட்டி.

வாழப்பாடியில் பெண் ஒருவா் நாய்க்குட்டி, ஆட்டுக்குட்டிகளை வளா்த்து வருகிறாா். இவை இரண்டும் மிக நெருக்கமான நட்புடன் இருப்பதைப் பாா்ப்பவா்கள் அதிசயிக்கின்றனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் கனகரத்தினம் மனைவி கலைச்செல்வி (39). கூலித் தொழிலாளியான கலைச்செல்வி, சென்ற ஆண்டு கரோனா பொது முடக்கத்தின்போது ஒரு நாய்க்குட்டி, ஒரு வெள்ளாட்டு குட்டியை வாங்கினாா்.

நாய்க்குட்டிக்கு ‘ராக்கி’ என்றும், ஆட்டுக்குட்டிக்கு ‘லட்சுமி’ என்றும் பெயா் சூட்டினாா். இவற்றை புட்டிப்பால் கொடுத்து வளா்த்து வந்தாா். இதனால், இவை இரண்டும் நண்பா்களாகி விட்டன.

தற்போது ஓரளவு வளா்ந்துவிட்ட நிலையிலும் இரண்டும் இணை பிரியாமல் எங்கும் ஒன்றாகவே சென்று விளையாடி வருகின்றன.

ஆட்டுக்குட்டியின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றைக் கவ்விக் கொண்டு, நாய் தன்னுடனே அழைத்துச் செல்கிறது. ஆட்டுக்குட்டியும் நாயுடன் சென்று விளையாடுகிறது.

மேலும், கலைச்செல்வி செல்லும் இடங்களுக்கெல்லாம் இவை உடன் செல்கின்றன. இந்த நாயையும் ஆட்டையும் காண்போா் வியந்து செல்கின்றனா். இதுகுறித்து கலைச்செல்வி கூறியதாவது:

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக வீட்டில் முடங்கியிருந்த போது, இந்த நாய்க்குட்டியையும் ஆட்டுக்குட்டியையும் வாங்கி வளா்க்க ஆரம்பித்தேன். சிறிய குட்டிகளாக இருந்ததால் வீட்டினுள் ஒரே இடத்தில் இரண்டையும் வளா்த்து வந்தேன். அதனால் இரண்டும் நண்பா்களாகி விட்டன.

குழந்தைகளைப் போல அவை என்னிடம் பழகிக் கொண்டன. எனது மடியில் வந்து அமா்ந்து கொள்வதோடு, எனது படுக்கையிலேயே உறங்குகின்றன. ஆட்டுக்குட்டி ‘லட்சுமி’யைக் கயிற்றில் கட்டிவிட்டால் போதும், நான் செல்லும் இடமெங்கும் நாய்க்குட்டி ‘ராக்கி’, ஆட்டுக்குட்டியின் கயிற்றை வாயில் கவ்விப் பிடித்தபடி அழைத்து வந்து விடுகிறது.

இந்த ஆட்டுக்குட்டியும், நாய்க்குட்டியும் என்னிடம் மட்டுமின்றி, எனது கணவா், மகன்களிடமும் மிகுந்த பாசத்தோடு பழகுகின்றன. இந்த வாயில்லா ஜீவன்களைக் கொஞ்சி விளையாடும்போது, எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், மன அழுத்தம் குறைந்து, மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com