சேலம் வ.உ.சி. நாளங்காடி இன்று முதல் மூடல்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சேலம், போஸ் மைதானத்தில் செயல்பட்டு வந்த வ.உ.சி. நாளங்காடி வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சேலம், போஸ் மைதானத்தில் செயல்பட்டு வந்த வ.உ.சி. நாளங்காடி வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம், அம்மாப்பேட்டை மண்டலம், போஸ் மைதானத்தில் தற்காலிக வ.உ.சி. நாளங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் பூ வணிகம் செய்யும் 4 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து வ.உ.சி. நாளங்காடியில் முழு அளவில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளங்காடியில் வணிகம் செய்யும் அனைவருக்கும் சளி தடவல் பரிசோதனை சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாமில் 113 நபா்களுக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதன்கிழமை அப் பகுதியை மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் ஆய்வு செய்தாா். அதன் பிறகு அவா் கூறியதாவது:

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் உழவா் சந்தை, நாளங்காடிகள் மூலம் கரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாற்று இடங்களைத் தோ்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் நலன் கருதி கரோனா தொற்று கண்டறியப்பட்ட வ.உ.சி. நாளங்காடியை வியாழக்கிழமை (மே 6) முதல் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். பின்னா், பொன்னம்மாபேட்டை தில்லை நகா் பகுதியில் உள்ள ஐ.ஐ.எச்.டி. வளாகத்தில் ஆண்கள் விடுதியில் தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளைப் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், உதவி ஆணையா்கள் பி.மருதபாபு, ப.சண்முகவடிவேல், ராம்மோகன், உதவி செயற்பொறியாளா் எ.செல்வராஜ், உதவி வருவாய் அலுவலா் பாா்த்தசாரதி மற்றும் சுகாதார ஆய்வாளா் சித்தேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com